வரவேற்கிறோம்

வருக வருக!

வரவேற்கிறோம்!

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ்மொழி பேசுகின்ற அன்பர்கள் கூடி, எமது மொழியில் உள்ள அரும் இலக்கியப் படைப்புகள், சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள் என பலவிதமான விடயங்களை ஆராய்வதும்

இங்கிலாந்து வாழ்கின்ற பல தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் அறிவுஜீவிகளும், தமிழார்வம் கொண்டவர்களும் இந்த வட்டத்தில் இணையச் செய்வதும், இலங்கை, இந்திய, சிங்கப்பூர், மலேசிய தமிழ் அறிஞர்கள் இங்கு வருகை தரும் பொழுது அவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து அவர்கள் தம் அறிவை அனுபவத்தை எம்முடன் பகிர வைப்பதும்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

என்ற தெய்வப்புலவர் வள்ளுவரின் குறளுக்கமைய நாடுகள் வேறுபாடின்றி யாரோடும் அவர் மகிழுமாறு கூடிப்பழகி இவர்களை இனி எப்போது காண்போம் என்று ஏங்கி அடுத்த மாதம் கூடும்வரை பிரிதலே இவ்வாசகர் வட்டத்தின் நோக்காகும்.

இந்த வாசகர் வட்டமானது பத்து வருடங்களாக இயங்கி பல இலக்கிய விழாக்களையும் கண்டுள்ளது.

13409082453_e20bb5cafb_b

எனவே நீங்கள் அனைவரும் மாதம் தோறும் வருகை தந்து உங்கள் வாசகர் வட்டத்தில் பங்குபற்றி ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் படைப்புகளையும் தந்து மேலும் சிறப்பிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

வண்ணத்தமிழ் மீதுகொள் வாஞ்சையினால் - தம்

எண்ணங்களில் இனிமை சேர்த்திட விழைந்தே - தமிழமுதை

உண்ண ஒரு சில மணித்துளிகள் ஒதுக்க முற்பட்டார் - தமிழ்

மண்ணின் மைந்தர்கள்! ஒன்று பட்டே சிறந்து நின்றாரே!